திருவாரூர், ஆக. 23 –

திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து வருகிறார். மேலும் சஷ்டிகாஸ்ரீ யின் தந்தை இளங்கோ அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், சஷ்டிகா ஸ்ரீ தனது ஆசிரியர் அகிலா ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு அசராமலும் அசாத்திய திறனுடனும் பதில்களை தங்கு தடையில்லா விழும் அருவிப்போல் கூறுகிறார்.

மேலும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர்களையும்  மழலை மொழியில் அவர் கூறும் அழகை வர்ணிக்க முடியாது என அம்மழலை பதிலளிக்கும் வீடியோவினை பார்த்தவர்கள் அதனை சமூக வலை தளங்களில் வைரலாக பரவ விட்டு பாராட்டு மழைகளை பொழிகின்றனர்.

மேலும் நடப்பு கல்வியாண்டில் ஜூன் மாதம் பள்ளியில் சேர்ந்த சஷ்டிகா ஸ்ரீ தற்போது தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் பெயர்களை கூறுவதுடன் மாவட்டங்களின் பெயர்களையும் கூறுவது அனைத்து தரப்பினராலும் பாராட்டக்களை பெற்று வருகிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here