பொன்னேரி, மார்ச். 03 –

பொன்னேரி நகர திமுக கட்சியினர் சார்பில் இன்று பொன்னேரிப் பகுதியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் கூட்டணி வேட்பாளர் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, அதற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஒரு விழாவைப் போன்று கொண்டாடினார்கள்.

மேலும் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான அதன் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் அப்போட்டியில் 1,10,556 வாக்குகள் பெற்றும் மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசை விட 66,575 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றார்

அதனை கொண்டாடும் விதமாக இன்று திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர திமுக கட்சி சார்பில் அதன் நகரச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், மற்றும் நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அவ் வெற்றியை ஒரு விழாப் போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும், அதனைத் தொடர்ந்து மேளதாளங்களுடன் நகரம் முழுவதிலும் வலம் வந்து வெற்றியை கொண்டாடினர். இதில் தீபன். உமாபதி. பாலன். உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here