கும்கோணம், ஜன. 20 –

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாற்றுத்திறனிடம் மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், அம்மனுக்கள் மீது நடவடிக்கை உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் பூர்ணிமா அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்ற சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, சாய்தளப் பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை, மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை மனுவை, கோட்டாட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் வழங்கினார்கள்.

மேலும் இக்கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரயில்வே துறையினர் வரவில்லை என்பதும், இனி வரும் கூட்டங்களில் வரவேண்டும் எனவும், கோட்டாட்சியரிடம் வலியுறுத்தினார்கள்.

மேலும், இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரா சமூக நல பாதுகாப்பு தனி வட்டாட்சியர் பிரேமாவதி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமரூல் ஜமான் அரசு போக்குவரத்து கழக பணியாளர் நிர்வாக அலுவலர் ராஜசேகரன் திருவிடைமருதூர் பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் முருகவேல் மற்றும் நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் மற்றும், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here