திருவண்ணாமலை பிப்.15-

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விளம்பரம் வெளியிட முன்அனுமதி பெற வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் மாவட்ட அளவில் விளம்பரம் வெளியிட முன்அனுமதி பெறவேண்டும். திருவண்ணாமலை மாவட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புகுழுவிடம் விண்ணப்பித்து முன்அனுமதி பெற வேண்டும். விளம்பர மாதிரியின் 2 நகல்களுடன் விண்ணப்பிக்கவேண்டும் அதன்பிறகுதான் நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக உள்ளாட்சி தேர்தல் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here