திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்…
ஸ்ரீ தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி ஆதிவிடங்கர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13.05.24 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய திருவிழாவான ஆதிவிடங்க தியாகராஜசுவாமியின் வைகாசி்விசாக தேரோட்ட விழா இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இதையொட்டி இன்று காலை ஆதிவிடங்க தியாகராஜ சுவாமி, அம்பாள், வினாயகர், சுப்ரமணியர்,ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு எழுந்தருள செய்யப்பட்டது.
தொடர்ந்து தேரில் ஆதிவிடங்க தியாகராஜசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது. பின்னர்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அருள்மிகு ஆதிவிடங்க தியாகராஜசுவாமியின் தேர் திருவிழாவை திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
இதில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துக்கொண்டு தியாகராஜா,கண்ணாயிரநாதா என கோஷங்கங்கள் எழுப்பியபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது கீழவீதி் நிலையடியில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் அசைந்தாடி வலம் வந்தது. தேர் திருவிழாவில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





















