தமிழக முதலமைச்சர் இன்று 7 மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதியத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி, ஆக 5 –

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் மக்களைத்தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலம் பொது மக்களின் வீட்டிற்கே சென்று தொற்றா நோய்களை கண்டறிந்து அவற்றினை பரிசோதனைகள் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல் இயன் முறை சிகிச்சை இயலா நோயாளிகளுக்கு வழங்கக் கூடிய வலி நிவாரணம் அதாவது சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப் படும்.

அரசின் நோக்கம் ;

இத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர் கொள்ளும் விதமாக நோயாளிகளின் வீட்டிற்கே சென்று சில அடிப்படையான முக்கிய சுகாதார சேவைகள் வ.ங்கப் பட வேண்டும் என்ற குறிக்கோளாகும்.

இதன் அடிப்படையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில்  45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று வழங்குதல், மற்றும் நோய் ஆதரவு சேவைகள், இயன் முறை மருத்துவ சேவைகள், சிறு நீரக நோயளிகளப் பராமரித்தல், அடிப்படை முக்கிய மருத்துவ சோதனைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறை பாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்படுள்ளது. மேலும் சமுதாயப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

பயன் படுத்தப் படும் பணியாளர்கள்

இத் திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சிப் பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடை நிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன் முறை மருத்துவர்கள், நோய் ஆதரவு செவிலியர், ஆகியோர் பங்கு பெறுவர்.

நடைமுறை செயலாக்கம்

இத் திட்டத்தில் பணியாற்றும் குழுவினரின் செயல் பாடுகளைக் கண்காணிக்க பொது சுகாதார துறையின் களப் பணியாளர்கள் அவர்களை வழி நடத்துவர். ஒவ்வொரு வட்டத்திலும் இச் சேவையை சிறப்பாக செயல் படுத்த சிறப்பாக வடிவமைக்கப் பட்ட வாகனங்கள் ஈடு படுத்தப் படும்.

திட்டத்தின் இலக்கு

இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்காக சுமார் 30 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த 1 கோடி மக்கள் பயன்பெற வேண்டும் இலக்கை நோக்கி பயனிக்கும் இதனால் ஆண்டின் இறுதியில் மாநில அளவில் அனைவருக்கம் நல்வாழ்வு என்ற இலக்கை அடைய வழி வகுக்கும், என்பதை மைப் படுத்திவுள்ளது இத் திட்டம்..

இத்திட்டம்  மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, மற்றும் சென்னை உள்ளடங்கிய 7 மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும்  இன்று முதல் தனது செயல் பாட்டினை தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத் திட்டத்திற்காக சிகிச்சை வழங்கயிருக்கும் செவிலியர் மற்றும் இயன் முறைச் சிகிச்சையாளர்களின் பயன்பாட்டிற்காக 3 புதிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளின் வீட்டிற்கே சென்று மருத்துவச் சேவை அளிப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கால்களை இழந்த 2 நபர்களுக்கு 4 இலட்சம் மதிப்பிலான செயற்கைக் கால்கள், சிறுநீரகங்கள் செயலிழந்த ஒரு நபருக்கு வயிற்றுனுள் டயாலிசிஸ் செய்யப்படும் முறைக்கான மருத்துவ உப கரணங்கள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உனி செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பெட்டமுகுளாலம் பகுதி மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில் ஒரு 108 அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்தி வழங்கியதோடு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு HBs Ag என்ற மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவுப் பரிசோதனை நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனம், டாடா நிறுவனம், ஓலா நிறுவனம், பைவிலி நிறுவனம், மிண்டா நிறுவனம், லுமினியஸ் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனம், டிவிஎஸ் நிறுவனம், செய்யார் சீஸ் நிறுவனம், மைலாஸ் நிறுவனம், எக்சைடு நிறுவனம், பஸ்ட் ஸ்டெப் பேபிவியர் நிறுவனம், நீல்கமல் நிறுவனம், மற்றும் செப்லர் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு, பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் தனியார் மருத்துவ மனைகள் மூலம்  கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினையையும் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், டி.மதியழகன், மற்றும் டி.ராமசந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மரு.ஜெ. ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநர் மரு. தரோஸ்,அகமது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.வி.ஜெயசந்திரபானு ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here