குடவாசல், மார்ச். 09 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செம்மங்குடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கமாகும்.

மேலும் இத்திருக்கோயிலில் 25 வது வருடமாக இவ்வாண்டு நடைபெறுவதால், இத்திருக்கல்யாணத்தினை முன்னிட்டு உலக நன்மை கருதி  சிறப்பு பூஜைகள் இத்திருக்கோயிலில் நடைப்பெற்றது. அத்திருக்கல்யாணத்தின் முதல்நாள் பூஜையாக கோபூஜை, கஜபூஜை பூஜையும், தொடர்ந்து அஷ்வபூஜை அதாவது குதிரைக்கான பூஜைகளும் வெகு விமர்சியாக நடைபெற்று, தொடர்ந்து, மகா தீபாராதணை நடைபெற்று பத்தர்களுக்கு விபூதி குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களும், மேலும்  அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று 09.03.23 வியாழக்கிழமை மாலை 6.00மணிக்கு ஆனந்தவல்லி தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஆனந்தவல்லி தாயார் சேவா டிரஸ்ட் குழுவினர் மற்றும் செம்மங்குடி ஹரிஹர குருக்கள் குடும்பத்தினர் ஏற்பாட்டில் 25 ஆண்டுகளாக தொடர்ந்து மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here