மீஞ்சூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 23 வது விளையாட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா வரவேற்புரையாற்ற கல்லூரி செயலாளர் லலித்குமார் ஓ.ஜெயின் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும் அதில் சிறப்பு விருந்தினராக கர்னல் பிரவீன்குமார் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு நேரமேலாண்மை குழுமனப்பான்மை, தன்னம்பிக்கை, நல்ல ஒழுக்கம் ஆகியவற்றை வளர்த்து நல்ல குடிமகனாக மாறுவதற்கு விளையாட்டுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும் கௌரவ விருந்தினராக இந்திய ரயில்வே மூத்த டிக்கெட் சேகரிப்பாளர், தென்மேற்கு ரயில்வே கை பந்து அணியின் கேப்டன் வி.செல்வபாண்டி கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு விளையாட்டு ஜோதியினை ஏற்றி வைத்து கல்வி மட்டும் இன்றி விளையாட்டின் மூலமாகவும் மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய முடியும் என பேசினார்.
நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை கேடட்களின் அணி வகுப்பு மற்றும் பிரமிட்கள் நடைபெற்றது. தொடர் ஓட்டப்பந்தயம், 100மீட்டர், 200மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
ஆண்டு விளையாட்டு அறிக்கையை விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சாந்தி வாசிக்க பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுகு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் இரண்டிலும் ஆதிநாத் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆண்களுக்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தை மூன்றாம் ஆண்டு கணிணி பயன்பாட்டியல் துறை மாணவன் எஸ்.ஹரிபிரசாத் வென்றுள்ளார். பெண்களுக்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தை இரண்டாம் ஆண்டு இ.சி.எஸ் துறை மாணவி என்.சந்தியா வென்றார்.
இதில் கணினி அறிவியல் துறை தலைவர் எஸ்.தனலட்சுமி, வணிகவியல் துறை பொறுப்பு தலைவர் ஆர்.முரளிதரன் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பி.சரவணன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.