பூவிருந்தவல்லி, ஏப். 01 –

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்சத்திரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சி  நடுநிலைப்பள்ளியின் 37 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு அப்பள்ளி வளாக கலையரங்கில் அப்பள்ளியின் மாணாக்கர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இவ்விழா அவ்வூராட்சி தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் தொடர் முயற்சியால், தனியார் பள்ளிகளின் ஆண்டு விழாவினை மிஞ்சும் விதமாக மிகச்சிறப்பாக இப்பள்ளி ஆண்டு விழா அமைந்திருந்தது.

மேலும் இவ்வாண்டுவிழாவினை முன்னிட்டு, பிரமாண்டமான வகையில் ஆடியோ செட், லைட் மியூசிக் என அமைக்கப்பட்டு, இவ்விழா கலைக்கட்டியது. மேலும் இதனைக் காண பெற்றோர்கள் மட்டுமல்லாமல் அவ்வூராட்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் திரளானோர் வந்து கலந்து கொண்டனர்.

மேலும் அரசு பள்ளி விழா என்றால் எப்போதும் போல்தானே இருக்கும் என்று  எண்ணி வந்த பார்வையாளர்களை, கலைநிகழ்ச்சியின் முதல் பாட்டிலேயே அமர்ந்த இருக்கையில் அவர்களை அசையாதபடியும் வியப்பில் மூக்கு மீது விரல் வைக்கும்படியும் மாணவர்கள் ஆடி அசத்திப்போட்டனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து மயிலாடும் பாதையிலே என்ற பாட்டுக்கு 2 ஒன்றாம் வகுப்பு மாணவிகள்  நரிக்குறவர் வேடமணிந்து  ஆடி அசத்தினர். ஒருபுறம் மாணவர்கள் வண்ண உடை அணிந்து  மழை நீர் சேமிப்பு, விவசாயம், சுற்று சூழல், அன்பு என ஒவ்வொன்றையும் அதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடனமாடினர்.

இதற்கு ஏற்றார் போல் ஆசிரியர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிளாசிக்கல் டான்ஸ், வெஸ்டன், நாட்டுப்புறப்பாடல், கும்மிப்பாட்டு, சைனீஸ் என வகை வகையாக நடனமாடி அப்பள்ளி மாணவர்கள் அசத்தினர். மேலும், பாண்டிய மன்னனின் பிழையை பொருக்காமல் மதுரையை எரித்த   கண்ணகி நாடகம் தத்துரூபமாகவும் மிகவும் சிறப்பாகவும் வசனங்களை உணர்ச்சிப் பொங்க உரைநிகழ்த்தியது  அங்கு வந்திருந்த அனைத்துப்  பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வர வைத்தது.

மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையுள்ள  இப்பள்ளியில் மொத்தம் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 227 மாணவர்கள் ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காவல்துறை உதவி ஆணையர் முத்துபாண்டி உரைநிகழ்த்தும் போது, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சினிமா கலைஞர்களை மிஞ்சும் வகையில் இருந்ததென தெரிவித்த அவர், பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவ் வொட்டு மொத்த கூட்டத்தையும் ஒரு ஓ போட வைத்து அவரது மகிழ்ச்சியையும் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உற்சாகத்தையும் பாரட்டையும் தெருவிக்கும் வகையில் அது அமைந்திருந்தது.

மேலும், இப்பள்ளி மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் கலைத் திருவிழாவில் கலந்து கொண்ட 11 மாணவர்களும் அவ்விழாவில் வெற்றிப்பெற்று பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here