போரூர், ஏப். 01 –

தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் மேலும் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அனைத்தது எம்- சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு, வானகரம்  குடியிருப்போர் நல சங்கம் சார்பில் போரூர் சுங்கசாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள்.

மேலும் அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்க சாவடிகளை உடனடியாக மூட வேண்டும். மேலும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணங்களை குறைக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியவறு தெரிவித்தனர். மேலும் இவ்வார்ப்பட்டத்தின் போது, மதுரவாயல் காவல்நிலைய கவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here