பொறியியல் துறை மாணவர்கள் அனைத்துப் பிரிவு பாடப் புத்தகங்களையும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன் பெறும் வகையில் புதிய செயலியை உருவாக்கி அரசு பொறியியல் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
கும்பகோணம், டிச. 30 –
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர், பொறியியல் துறையின் அனைத்து பிரிவு மாணவர்கள் தங்கள் கல்வி பயில தேவையான அனைத்து விதமான புத்தகங்களையும் எளியமுறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் 2 ஆண்டுகள் உழைப்பின் பயனாக புதிய செயலி உருவாக்கி சாதனைப் புரிந்துள்ளார்.
ரோட்டரி கிளப் ஆப் கும்பகோணம் டெம்பிள் சிட்டி மற்றும் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை கடந்த ஐந்து நாட்களாக நடத்தியது, இப்பயிற்சியின் சிறப்பம்சமாக இன்று சுமார் 40 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் சி.எஸ்.இ. மாணவர் விஜயராகவன் சுமார் 2 ஆண்டுகள் தனது கடினமான உழைப்பின் பலனாக வடிவமைத்த AEC LMS என்ற செயலி மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று அர்பணிக்கப்பட்டது,
இதன் காரணமாக, பொறியியல் படிக்கும் மாணவர்கள் அவர்கள் எந்த ஒரு பிரிவில் கல்வி பயின்றாலும், எளிய முறையில் இந்த ஒரே செயலி வாயிலாக தங்கள் பிரிவு சார்ந்த புத்தங்களை பி.டி.எப். வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது இதற்காக எந்த ஒரு நூலகத்திற்கும் சென்று தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை, நேரம் மற்றும் பெருந்தொகையும் மிச்சமாகும்,
விழாவிற்கு நயின் ஏகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்விழாவில் ரோட்டரி சங்க தலைவர் செந்தில் மற்றும் ரோட்டரி சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் கல்லூரி தலைவர் டி செந்தில்குமார் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது



















