பழவேற்காடு, மார்ச். 17 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான புற மற்றும் உள்புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாகயிருந்து வந்த நிலையில், ஊராட்சி மன்றத்தின் சார்பில் இம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் புற மற்றும் உள் நோயாளிகளின் வசதி குறைப்பாடுகள் உள்ளதை அதானி பவுண்டேஷனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதின் அடிப்படையில், அதானி பவுண்டேசன் சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,
ரூ. 2,40,000 மதிப்பீட்டில் 20 கட்டில் மெத்தைகளையும், மற்றும் ரூ. 30,000 மதிப்பீட்டில் 100 லிட்டர் கொள்ளவுக் கொண்ட குடிதண்ணீர் சுத்திகரிப்பு கருவி ஆகியவற்றை அக்குழுமம் இன்று பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு வழங்கியது.
மேலும் இன்று நடைப்பெற்ற நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியில் அதானி துறைமுக தலைமை நிர்வாகி ராம்தேவ், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதிசரவணன், துணை தலைவர் பி.எல்.சி.ரவி, மருத்துவர் ஃபாத்திமா, அதானி ஜேசுராஜ், பழவேற்காடு ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.