உத்திரமேரூர், மார்ச். 11 –
உத்திரமேரூர் அடுத்துள்ள கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை ஸ்ரீவைத்திய கல்யாணசுந்தரர் சுவாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக விழா நேற்று மிகவும் விமர்சையாக நடைப்பெற்றது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டியாம்பந்தல் கிராமத்தில் பழைமையான திருக்கோயிலாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் இத்திருக்கோயிலுக்கு, மகா கும்பாபிஷேகம் நடத்திட அவ்வூர் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முடிவெடுத்து, அக்கோயில் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக பெருத்த பொருட் செலவில் இக்கோவில் திருப்பணிகள் நடந்து முடிவுற்ற நிலையில் அக்கோயிலின் மகாகும்பாபிஷேக விழா நேற்று மிக விமர்சையாக நடைப்பெற்றது.
இவ் மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, காலை 7:30 மணி முதல் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் தலைமையில், 8:00 மணியளவில் யாகசாலையில் இருந்து புறப்பட்ட கடம் கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனித கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
அதைத்தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில், கட்டியாம்பந்தல் கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.






















