கும்பகோணம், நவ. 10 –
கும்பகோணம் பகுதிகளில் நேற்று இடைவிடாது பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்கதிர்களும் சம்பா நெல் பயிர்களும் மழை நீரில் மூழ்கி நாசமாகிவுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .
கும்பகோணம் பகுதிகளில் நேற்று ஒரு நாள் மட்டும் 12 சென்டிமீட்டர் மழை பெய்ததால் பட்டீஸ்வரம், ஆரியப்படைவீடு, சோழன் மாளிகை, தாராசுரம், நாச்சியார் கோயில் பகுதிகளில் விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டமடைந்துள்ளனர்
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 12 செ.மீ. மழை பெய்தது. இதனால் ஆரியப் படைவீடு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்கதிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளது. இதே போல அருகில் உள்ள ஆரியப் படைவீடு மற்றும் நாச்சியார் கோயில் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடியும் துவங்கப்பட்டுள்ளது. நடப்பட்டிருந்த இளம் நாற்றுகளும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். இம் மழை தொடர்ந்தால் மற்ற பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.