பொன்னேரி, ஏப். 24 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகரத்தில் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலை தணிக்க நீர்.மோர். பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமை வகித்து .நீர் .மோர். பந்தலை திறந்து வைத்து முதல் நாள் என்பதால் வெள்ளரிப்பிஞ்சு. மோர். தர்பூசணி பழரசம். குளிர்பானங்கள். உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சிகளை பொன்னேரி நகரக் கழக செயலாளர் தயாளன், மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர். அவருடன் கட்சியின் பொறுப்பாளர்கள் பானுமதி. மெரட்டூர் ரகுபதி .ரவி. உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.