திருவாரூர், மார்ச். 01 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகளில் கலந்து கொண்டார்கள். மேலும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய பிற அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி வலியுறுத்தினார்கள். அதில் முக்கியமாக விவசாயிகள் இந்த முறை சம்பா மற்றும் தாளடி சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டது எனவும், மழைவிட்ட பிறகு தற்பொழுது அறுவடை நடந்து வருவதாகவும், மழை பாதிப்பினால் மகசூல் குறைந்துள்ளதாகவும், எனவும் அப்போது குறிப்பிட்டனர்.

மேலும் இதுக்குறித்து முதல்வர்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20000 ரூபாய் அறிவித்தது போல விவசாயிகள் அறுவடை செய்ய இயந்திரங்களுக்கு தந்த வாடகைத் தொகையையும் அரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் முழு மானியமாக வரவு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

மேலும் தற்பொழுது ஆற்றில் நீர்வரத்து இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையை அரசு திறக்கும் பட்சத்தில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர போர்க்கால அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள் கிளை ஆறுகள் சி மற்றும் டி வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.

மேலும் குடவாசல் மற்றும் செல்லூர் பகுதிகளில்  கடந்த 2021 22 ஆம் ஆண்டு உளுந்து சாகுபடி செய்யப்பட்டு அதற்கு பயிர் காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது அந்த நிவாரணம் யார் யாருக்கு விடுவிக்கப்பட்டது என்ற விவரத்தை அந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களிலும் வேளாண்மை துறை அலுவலகங்களில் ஒட்ட வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும் அப்போதுதான் வெளிப்படை தன்மை இருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தார்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here