கும்பகோணம், ஆக. 07 –

கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு  38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் மழலையர்களுக்கான மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மழலையர்கள் திருவள்ளூவர், பாரதியார், ஸ்ரீகிருஷ்ணர், அனுமான் வேடமணிந்து, மழலை மொழியில் வசனங்கள் பேசி அசத்தியது பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.

கும்பகோணத்தில் உள்ள சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அன்னிபெசன்ட் கலையரங்கில், மழலையர் பள்ளி மாணவ மாணவியர்களிடையே மாறுவேடப்போட்டி நடைபெற்றது. முன்னதாக அப்பள்ளியில் கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வரை நல்லொழுக்கம், தேசபக்தி, தெய்வப் பக்தி ஆகியவற்றை வளர்க்கும் விதமாக பல்வேறு போட்டிகள் நடப்பது வழக்கமாகும்.

அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும், அப்பள்ளியில் 38 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அக்கலையரங்கில், மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டி, விஷ்ணுசகஸ்ரநாமம் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம், குழுநடனம், பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி என பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான குழந்தைகள் பாரதியார், திருவள்ளுவர், ஸ்ரீ கிருஷ்ணர், ராமர், அனுமன், மீராபாய் உள்ளிட்ட பலவிதமான திருவுருவங்களில் மாறுவேடமிட்டு தங்களது கருத்துக்களை அழகிய மழலை மொழியில் வசனத்தை உச்சரித்தது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. அதில் சிறப்பாக வேடமணிந்து நடித்த குழந்தைகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here