தேனி: ஜூன்

தேனி அருகே உள்ள கம்மவார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணிக் குழு சார்பாக 5 வது சர்வதேச யோக தினம் அனுசரிக்கப் பட்டது. அக் கல்லூரி யின் பாலி டெக்னிக் பொருளாளர் தாமரை கண்ணன், கல்லூரி முதல்வர் முனைவர் தர்மலிங்கம், ஆகியோர் தலைமையில் நடைப் பெற்றது.

இந்த யோக பயிற்யினை தேனி சஹஜ யோக மையத்தின் பயிற்சியாளர்கள் அனிதா, நாகலட்சுமி, முத்துராமலிங்கம் ஆகியோர் யோக பயிற்சியினை மாணவர்களுக்கு செய்து காட்டி செயல் விளக்கம் அளித்தனர்.

முன்னதாக நடைப் பெற்ற விழாவில் உலக ரத்த தானத்தினை முன்னிட்டு இரத்த தானம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றி தேனி மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு வாரிய திட்ட மேலாளர் முகமது பாருக், மேற் பார்வையாளர் வைரவன் , அரசு மருத்துவமணை ஆலோசகர் முத்துலட்சுமி, அந்தோனி பிரன்சிஸ்ஆகியோர் மாணவர்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தி னார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் செல்வக் குமார், பிரதீப் ஆகியோர் செய்திருந்தனர். இந்த யோக மற்றும் இரத்த தான விழிப்புணர்வு முகாமில் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here