பொன்னேரி, ஜூலை. 12 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு குறித்த ஒத்திகை நிகழ்வு நடைப்பெற்றது.
மேலும் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் மாணவர்களிடையே தீ விபத்து பாதுகாப்பு குறித்து தீயணைப்பு வீரர்கள் மாதிரி ஒத்திகையை செய்து காட்டினர். தீ விபத்து நேரங்களில், அத் தீ மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் விக்கமாகவும் வெகுச்சிறப்பாகவும் செய்முறை விளக்க ஒத்திகையை செய்துக் காட்டினார்கள்.
இந்நிகழ்வு பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இவ்வொத்திகையின் போது, பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் விஜயகுமார் திரிபுரசுந்தரி, நடராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடனிருந்தனர்.