மீஞ்சூர், டிச. 27 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடப்பட்ட மீஞ்சூரில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு நேரத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மீஞ்சூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் நீதி மையம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மற்றும் துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மீஞ்சூர் வட்டார சுகாதார மருத்துவ செவிலியர்கள், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு அரிசி மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகளை 200 நபர்களுக்கு வழங்கினர்.
அந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முகநூல் குமார் கலந்து கொண்டார். மக்கள் நீதி மையத்தின் திருவள்ளூர் மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் பட்டமந்திரி ஜெகதீசன், மீஞ்சூர் நகர செயலாளர் எம்.சீனிவாசன் தொழிற்சங்க அணி நகர செயலாளர் தமிழ் குமார், மீஞ்சூர் வட்ட செயலாளர் சுந்தரவடிவேல், மக்கள் நீதி மைய நிர்வாகிகள் மோகன்ராஜ், முகமது ஆசின், யோகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.