கும்பகோணம், ஆக. 10 –

கும்பகோணத்தில்  தலைமை தபால் நிலையம் முன்பு தபால் துறை சார்பில் தபால் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்திய அஞ்சல் துறையில் தற்போதுள்ள ஐ.பி.பி.பி., என்ற நிறுவன அமைப்பை வெளியேற்ற வேண்டும். ‘ஐ.டி.2.0’ என்ற திட்டத்தில் அஞ்சல் துறையில் பல்வேறு தொழில் நுட்பங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவிட் தொற்றினால் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கண்டிப்பாக கருணை அடிப்படையில் இலாக்கா பணி வழங்கிட வேண்டும். எல்ஜிஓ எழுத்தர் தேர்வில், தபால்காரர் மெயில் கார்டு எம் டி எஸ் ஊழியர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினை திரும்ப அளித்திட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டி ஏ நிலுவை தொகையினை வழங்கிட வேண்டும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு சங்கீதா தங்கராசு ஆகியோர் தலைமையில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் அஞ்சல் ஊழியர் சங்க செயலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அஞ்சல் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் சங்கம் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் என் எஃப் ஆர் சி சங்கம் சிஐடியூ ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இப்போராட்டாத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here