திருவாரூர், ஆக. 10 –

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டார பகுதியில் மட்டுமே சுமார் 14000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். மேலும் தற்போது, பல இடங்களில் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நன்னிலம் பகுதியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதியிலிருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நன்னிலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து கடந்த 15 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர்.

அத்துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் நன்னிலம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். என உறுதியளித்ததின் அடிப்படையிலேயே  இங்கு நெல் மூட்டைகளை கொண்டு வந்துள்ளதாக கூறும் விவசாயிகள். ஆனால் இன்று வரை நெல்கொள்முதல் செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் அத்துறை அலுவலர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இது குறித்து விவசாயிகள் சொல்லும்போது.. ‘அதிகாரிகளிடம் நேரில் சென்று நன்னிலம் பகுதியில் உள்ள அரசு நெல் நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் விவசாயிகளை அலட்சியப்படுத்துவதாகவும், இதனால் அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிக்கும் நிலையில் உள்ளது. எனவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்நிலை தொடரும் பட்சத்தில் நன்னிலம் பகுதியில் நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கூறினர்.

பேட்டி 1. செல்வம் -விவசாயி. சிகார்பாளையம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here