தாம்பரம், ஜன, 14 –

சென்னை தாம்பரம் அடுத்துள்ள கீழ்கட்டளை பாலாஜி நகரில், தவமொழி பெளண்டேஷன் நிறுவனர் தவஶ்ரீ குபேர லஷ்மி அப்பகுதியில் முதியோர் இல்லம் நடத்துவதுடன் ஆதரவற்றோருக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று உழவர்களின் திருநாளாம் தைப் பொங்கல் விழாவினை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உழவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கையையும் போற்றும் வகையில் இவ்விழாவினை சாதிமதம் கடந்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று கீழ்கட்டளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆதவற்றோர், முதியோர், மற்றும் ஊனமுற்றோர் ஆகியோரும் இத்திருநாளை மன மகிழ்வோடு கொண்டாடும் வகையில் 200க்கும் மேற்படோருக்கு இலவச வேட்டி சட்டை புடவைகளை வழங்கி அவர்களை மனம் மகிழச்செய்தனர்.

மேலும் இந்நிகழ்வின் போது ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் புத்தக பைகளையும் அவர்களுக்கு  வழங்கினார்கள்.

இவ்விழாவின் தொடர்ச்சியாக சர்க்கரைப் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கி இவ்விழாவிற்கு சிறப்புச் சேர்த்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், தவமொழி பௌண்டேஷன் பொருளாளர் விஜயகுமார்,  svs club president vp வெங்கட் ரமணா, லயன் ரமணி, மண்டல தலைவர் மீனா குமாரி, லயன் பிரபாகர், அரிமா நாதன், லயன் சரவணன், அக்ஷ்யலக்ஷ்மி  ஆகிய அப்பகுதி பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்று இவ்விழா மிகச்சிறப்பாக நடைப்பெற மெருகேற்றினார்கள் என்றால் அது மிகையாகது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here