வலங்கைமான், நவ. 26 –

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார்  கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர்.

இந்நிலையில்  அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட அணியமங்கலத்தைச் சேர்ந்த முத்து வெங்கடாசலம் என்பவர் மகனும் பிரபல ரவுடியுமான குபேரன்  என்பவராவர். மேலும் அவர் மீது 2 கொலை வழக்குகள், அடிதடி மற்றும் பிற வழக்குகள் உள்ளிட்ட  9 வழக்குகள் உள்ளது. அவ் வழக்குகள் மீது தற்போது விசாரணையில் இருந்து வரும் நிலையில்,  ரவுடி குபேரன் மீண்டும் 2  தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் மேற்கண்ட ரவுடியின் நடவடிக்கைகளை வலங்கைமான்   காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் , பிரபல ரவுடி குபேரன்  தொடர் குற்றச்செயல்களில்  ஈடுபடுவதை உறுதி செய்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார்  உத்தரவின் அடிப்படையில்,  கோபிநாத் உதவி ஆய்வாளர்  தலைமையிலான தனிப்படையினர் பிரபல ரவுடி குபேரனை வலங்கைமான் பகுதியில் நின்று கொண்டிருந்த போது கைது செய்தனர்.

மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் போது, குபேரன் சட்டவிரோதமாகவும் எவ்வித அனுமதியோ அல்லது உரிமமோ இன்றி மறைத்து வைத்திருந்த DBBL துப்பாக்கி தோட்டாக்கள்-18 மற்றும் 1 ½ அடி நீளமுள்ள கத்தியும் கைப்பற்றினார்கள். தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரபல ரவுடி குபேரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here