வீடு திரும்பினார் மனோகர் பாரிக்கர்
பனாஜி:
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு...
ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்-கவர்னர் கிரண்பேடி மீண்டும் வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாரியா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் நஸ்கார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தாரியா பஞ்சாயத்து தலைவி சுவப்னா நஸ்கரின் கணவர் ஆவார்.
கார்த்திக் நேற்றிரவு தங்கரகாளி பகுதியில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ...
புல்வாமாவில் இறந்த வீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்வதா? -மோடி மீது மம்தா பாய்ச்சல்
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என...
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா ஜாமினில் விடுதலை
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு...
நான் தலித் என்பதால் முதல்வராக முடியவில்லை-பரமேஸ்வரா பேச்சு
தேவநகரி:
கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:
தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்கு முறைகளில் நானும் பாதிக்கப்பட்டேன். நான் தலித் என்பதால் தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை....
புதுவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்-அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அறிவிப்பு
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் எங்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். எங்களின் நண்பரும் ஆவார். அவரது சமீபத்திய செயல்பாடுகள் சபாநாயகருக்குரிய நடுநிலையை தவறுகிறாரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை...
இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்: மோடி தொடங்கி வைக்கும் 6000 ரூபாய் திட்டம் குறித்து ப. சிதம்பரம்...
விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சரும் ஆன ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்....
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புதுடெல்லி:
மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன்மூலம்...










