வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதியில் உலகிலேயே முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது : வணிகம் மற்றும்...
புதுதில்லி, ஜன. 23 -
உலகில் கெர்கின்ஸ் ஏற்றுமதியில் இந்தியா முதல் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 1,23, 846 மெட்ரிக் டன் அளவுக்கு வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் (2020-21) வரை 114 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.
பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில்...
புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற வணிகர்கள் கூட்டமைப்பின் இருசக்கன...
பாண்டிச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டு வணிக நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை...
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் கவனம் செலுத்த...
டெல்லி, ஜன. 14 -
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் (விசி) கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் .பியூஷ் கோயல் வேண்டுகோள்...
விமான தாக்குதலில் முக்கிய பங்காற்றிய 2 கேரள வீரர்கள்
திருவனந்தபுரம்:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது.
ராணுவத்தின் விமானப்படை வீரர்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தனர். சில மணி நேரங்களில் நடந்த இந்த தாக்குதலில்...
பாடம் படிக்க கடினமாக இருப்பதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவி : புதுச்சேரி காவல்துறையினர்...
புதுச்சேரி, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் கல்லூரியில் பாடங்கள் படிக்க கடினமாக இருப்பதாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடத்தின் அழுத்தம்...
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #cycloneFani
புதுடெல்லி
பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள்...
எல்லையில் பதட்டம் நிலவிய போதும் மோடியால் பிரசாரம் செய்யாமல் இருக்க முடியாது- ராகுல் தாக்கு
மும்பை:
மராட்டிய மாநிலம் துலேவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் ஒற்றுமை நிலவுகிறது. ஆனால் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசுகிறார். இந்தியா-பாகிஸ்தான்...
தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் : ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் ...
சென்னை, மார்ச். 29 -.
ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி,...
7 ஆண்டுகளை நிறைவு செய்தது ‘மைகவ்’ இணையதளம்
பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கப்பட்ட ‘மைகவ்’ இணையதளம், 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக, அரசை கொண்டு செல்ல ‘மைகவ்’ (https://www.mygov.in/) என்ற இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கு தேவையான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்கள் பகிர்ந்துக் கொண்டனர். இந்த தளம் தனது 7 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது.
மக்கள் பங்களிப்பு நிர்வாகத்தை வளர்த்ததில், மைகவ் இணைய தளத்தின் பங்களிப்பை நினைவு கூறும் நிகழ்ச்சி, ‘நேர்மறையான எனது அரசு (MyGov Positive ) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. சமூக இணையதளத்தை நேர்மறையாக பயன் படுத்துவதை ஊக்கு விப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
கொரோனா பற்றி தவறான தகவல்கள் நாட்டில் பரவும் நிலையில், மைகவ் இணையதளத்தின் கொரோனா உதவி மையம் - வாட்ஸ் அப் கலந்துரையாடல் மூலம் பொய் செய்தி களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நம்பகமான செய்திகளை வழங்கியது.
மக்களை ஈடுபாடு கருத்தை முன்னெடுத்துச் சென்று, சிறந்த நிர்வாக இலக்கை அடைய, மைகவ் உத்தரப்பிரதேசம் இணையதளத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, மைகவ் இணையதள தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மைகவ் குழுவின் பங்கை பாராட்டிய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிப்பதன் மூலம், அனைத்தும் உள்ளடங்கிய நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தும் பிரதமரின் கனவை நனவாக்க மைகவ் இணையதளம் பணியாற்றியுள்ளது’’ என்றார்.
ஆட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் மக்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதில் மைகவ் இணையதளம் ஆற்றிய புதுமையான பங்கை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.
நான் தலித் என்பதால் முதல்வராக முடியவில்லை-பரமேஸ்வரா பேச்சு
தேவநகரி:
கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:
தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்கு முறைகளில் நானும் பாதிக்கப்பட்டேன். நான் தலித் என்பதால் தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை....




















