மீஞ்சூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக் இணங்கவும், மேலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படியும், திகுக கட்சியினர் சார்பில் மிஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
அதனடிப்படையில் அந்த ஒன்றியத்தில் உள்ள தடப்பெரும்பாக்கம், மேட்டுப்பாளையம், நாலூர், நெய்தவாயல், திருவெள்ளைவாயல் உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தல்கள் திறப்பு விழா நடைபெற்றது.
அந் நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்து நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் நாளான இன்று பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், குளிர்பானங்கள், உள்ளிட்டவைகளை வழங்கினார்.
மேலும் அந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் ஆரணி அன்புவாணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் பா.து.தமிழரசன், மொழிப்போர் தியாகி பழவை கன்னிமுத்து, இளைஞர் அணி தமிழரசன், மணிகண்டன், ஸ்ரீதர், கலைவாணன், நந்தியம்பாக்கம் கார்த்திக், ஈஸ்வரி ராஜா, மேட்டுப்பாளையம் சங்கர், நாலூர் சங்கர், நெய்த வாயல் ராஜா, வாயலூர் கோபி உள்ளிட்ட திரளான திமுக தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.