இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் காவல் நிலைய  சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்த இரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரவிடப்பட்டு தனிப்படை சந்தேகத்திற்கு இடம்தரும் வகையில் நின்று கொண்டு இருந்த திருப்பூரை சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுக்களை தனிப்படை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மண்டபம்; நவ.12-

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவிற்கு வந்த இரகசிய தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சார்பு-ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. உளவுத் துறையின் உதவி யோடு தனிப்படை சந்தேகப் படும் நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

மேலும் கூடுதலாக மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்திய பிரத்யேக கைபேசி எண்.9489919722-ல் பல தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 11.11.2019-ம் தேதி சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் மண்டபம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆங்காங்கே மறைமுகமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது, தகவலாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மண்டபம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை, மண்டபம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவரிடம் 201 ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மேற்படி சந்தேக நபர் குறித்து  விசாரணை செய்ததில் முரளிதரன் (எ) அருண் (24),  சித்திரை குமார் என்பவரின் மகன் என தெரிய வந்த்து, மேலும் அவர் அவினாசி அகதிகள் முகாம், திருப்பூர் மாவட்டம் என தெரிய வந்தது. மேற்படி நபரிடமிருந்து,  கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள், திருப்பூர் மாவட்டத்தில் அச்சடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இது குறித்து மண்டபம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here