மதுரை:

இந்தியாவில் முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய பெண்கள் கட்சி மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி, நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்றத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் அமர வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோள்.

எங்கள் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மதுரை, வேலூர், மத்திய சென்னை, காஞ்சிபுரம் உள்பட 283 பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம்.

தமிழகத்தில் மட்டும் 20 தொகுதிளில் போட்டியிடுவோம். இதற்கான வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.
வேட்பாளர் தேர்வில் வக்கீல், சமூக ஆர்வலர்களுக்கு முன்னுரிமை தரப்படும். எங்கள் இயக்கத்தின் கொள்கையுடன் ஒத்துப்போகும் ஆண்களை வேட்பாளராக நிறுத்த உள்ளோம்.

எங்கள் இயக்கத்துக்கு தேசிய அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை. அது மாநில அளவில் இயங்கி வரும் கட்சி. அதே நேரத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கலந்து கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here