நீடமங்கலம், ஜன. 10 –
திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியின் சார்பில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ஒளிமதி கிராமத்தில் ஓபிசி அணி மாவட்ட பொருலாளர் கலையரசன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி நீடமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒளிமதி கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்றது. மேலும் இவ்விழா நீடாமங்கலம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் கவின்ராஜ் ஏற்பாட்டில் நடைப்பெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று மண்பானையில் சமத்துவ பொங்கல் வைத்தும், கும்மியடித்து குலவையிட்டு இவ்விழாவில் குதுகலத்துடன் பங்கேற்றனர்.
இவ்விழாவில் மாவட்ட துணைத்தலைவர் சதா.சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோட்டூர் ராகவன், கண்ணன், மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, ஓபிசி அணி மாவட்ட தலைவர் பால பாஸ்கரன் , மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவர் கமாலுதீன், மாவட்ட விவசாய அணி துணைதலைவர் பிரபாகரன், நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் வாஞ்சி மோகன், பொதுச்செயலாளர் மகேஷ், ஒன்றிய செயலாளர் வெற்றிமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் காமராஜ், நகரத்தலவர் சிந்துசுப்ரமணியன், கொரடாச்சேரி பேரூர் தலைவர் கோவி. அன்புவிக்னேஷ், ஆகியோர் கலந்துக்கொண்டு பொங்கல் விழாவினை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் இவ்விழாவில் பங்கேற்ற பெண்கள் தமிழர்களின் பாரம்பரிய விழாவான தை திருநாளை சிறப்பிக்கும் வகையில், பெண்கள் பாரம்பரிய உடையணிந்தும், செங்கற்கள் மூலமாக அடுப்பு வைத்தும், விறகுகள் மூலம் தீயிட்டும், மண்பானையில், பால், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு செங்கரும்பு தோரணம் நடுவே சர்க்கரை பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல், என்று குலவை போட்டும் கும்மியடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் இந்த விழாவில் பாஜக கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் சர்க்கரை பொங்கல் வழங்கி தங்கள் பொங்கல் வாழ்த்துக்களையும், பொங்கலையும் பரிமாறிக் கொண்டனர்.