கும்பகோணம், மார்ச். 25 –

கும்பகோணம் அருகேவுள்ள நாகராசன் பேட்டையில்  இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தையல் பயிற்சி முடித்த 31 பெண்களுக்கு, தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ஸ்ரீகாந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கும்பகோணம் அருகே நாகராசன் பேட்டையில்  இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கிராமிய ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில்  பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி கடந்த மாதம் முதல் தொடர்ந்து 30 நாட்கள நடைபெற்றது.

இதில், வருடத்திற்கு 56 விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன அதில் இதுவரை 26 விதமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது இந்த பயிற்சியில் தையல் பயிற்சி, அழகு கலை பயிற்சி, அப்பளம், ஊறுகாய், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட 26 பயிற்சிகளில் நாகராசன்பேட்டை அய்யாவாடி ஆகிய இரு ஊராட்சிகளிலும் தையல் பயிற்சியும், தண்டாந்தோட்டம் ஊராட்சியில் 35 நபருக்கு ஆபரணம் நகை தயாரிக்கும் பயிற்சி நடைபெற்று சான்றிதழ் வழங்கப்பட்டது

இந்த பயிற்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். நாகராசன் பேட்டையில் நடைபெற்று தையல் பயிற்சி முடித்த 31 பெண்களுக்கு தஞ்சை மாவட்ட கூடுதல்  ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் சான்றிதழை வழங்கி சிறப்புரையாற்றினார்

அப்போது ஒரு பயிற்சியோடு நின்று விடாமல் மேலும் சில பயிற்சிகளை சேர்ந்து கற்க வேண்டும் என்றும், இதில் பயிற்சி பெறும் பெண்கள், பிற பெண்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் தங்களை தயார் செய்து கொண்டு அவர்களுக்கு வருங்காலத்தில் பயிற்சியாளராக வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், கூத்தரசன் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் ஊராட்சி மன்ற தலைவர் மங்கையரசி சரவணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பயிற்சியாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here