உள் படத்தில் இருப்பவர் உயிரிழந்த நரேஷ்

சென்னை, மார்ச். 22 –

சென்னை பள்ளிக்கரணை அருகே ஏசி மெக்கானிக் மர்ம உறுப்பு மற்றும் வெட்டு காயங்களுடன் கழுத்தை அறுத்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் கழுத்து அறுக்கப்பட்டு, மர்ம உறுப்பு, தொடை மற்றும் முகம் முழுவதும் வெட்டுக் காயங்களுடனும் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது..
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போலீசார் கொலையில் பலியானவரை பற்றி விசாரணை மேற் கொண்டனர். நெசவாளநகர் பகுதியைச் சேர்ந்த நரேஷ் (23), இவர் ஏசி மெக்கானிக் வேலை செய்து வருகிறார் என்பது தெரிய வந்தது.
மேலும், கழுத்து அறுக்கப்பட்டு, முகம் முழுவதுமும் காயம் மற்றும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு கிடந்த நரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் நரேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இறந்து கிடந்த இடத்தில் ஆய்வு நடத்தியதில் மதுபாட்டில் மூடி இருந்ததால் நரேஷ் நண்பர்களுடன் மது அருந்தும் போது வாய் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது போன்ற கேள்விகளோடு பல்வேறு கோணங்களில் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here