திருவள்ளூர், பிப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்துள்ள மேல்நல்லாத்தூரில் , மர்ம கும்பல் மளிகைக் கடையில் மளிகைப் பொருட்களை வாங்கி கொண்டு, மீண்டும் அக்கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிவுள்ளனர். அவர் மாமூல் தர மறுத்ததால் அவரை அக்கும்மல் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிவோடிவுள்ளனர். அச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் உரிமையாளர் புகார் அளித்தும் இரண்டு தினங்கள் முடிந்த நிலையில் இதுவரை எவ்விதநடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லையென புகார் தெரிவித்து அக்காவல் நிலையம் முன்பு நாடார் சங்க நிர்வாகிகள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை, பகுதி எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (57) .இவர் அதே பகுதியில் அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப் 5- ஆம் தேதி இரவு மது போதையில் வந்த 2 மர்ம நபர்கள் மளிகை கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தர மறுத்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து கடைக்காரர் பணம் கொடுக்காமல் பொருள் தரமுடியாது என அவர்களிடம் கூறியுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேலு மற்றும் மாலு ஆகியோர்கள் நான் யார் தெரியுமா ‌ எங்களிடம் பொருளுக்கு பணம் கேட்கின்றாயா எனச் சொல்லி கடையின் உரிமையாளர் ஆறுமுகசாமியை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

அப்போது கடைக்கு வந்த சிலர் ஆறுமுகசாமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து  திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் பலத்த காயம் ஏற்பட்ட‌ ஆறுமுகத்தை மேல் சிகிச்சைக்காக தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுக் குறித்து  ஆறமுகசாமியின் மகன் தேன்ராஜ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார் எனத்தெரிய வருகிறது.  அப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், மேலும் அம் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 2 நாட்கள் கடந்தப் பின்னும் இதுவரை ‌ தப்பிச் சென்ற மர்ம‌ நபர்களை காவல்துறையினர் கைது செய்யாததால்  சென்னை நாடார் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை  விரைவில் கைது செய்யப்படும் என இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் உறுதி அளித்தார்.  மாமூல் கேட்டு தர மறுத்ததால் தாக்கியவர்களை காவல் துறை கைது செய்யாவிட்டால் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப் போவதாகவும் வியாபாரிகள் எச்சரித்து விட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here