செங்கல்பட்டு, ஏப். 08 –

செங்கல்பட்டு நகரின் முக்கிய பகுதியான இராட்டிணங்கிணறு பகுதியாகும். மேலும் அப்பகுதி வழியாக செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் செல்ல வேண்டும் என்றாலும் மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்றாலும் அப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், இப்பகுதி இரவு நேரங்களில் எப்போதும் இருளாக இருந்து வந்த சூழலில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் இருந்து வந்தது. அதனடிப்படையில் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த கோரிக்கையின் அடிப்படையில் அப்பகுதியில் இரண்டு உயர் கோபுர மின் விளக்குகளை பல லட்சம் மதிப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில்  அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்நாள்வரை அவ்விரண்டு உயர் கோபுர மின் விளக்குகள் மக்கள் பயன்பாட்டிற்க்கு வராமல் அவையிரண்டும் பார்வைப் பொருளாகவே இந்நாள் வரை காட்சி தருவதாகவும், மேலும் அதற்கான காரணங்களும் தெரியவில்லையென அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதனால் தொடர் விபத்துகள் மற்றும் சமூகவிரோதிகளால் குற்ற நிகழ்வுகள் ஏற்படும் சூழலும் நிலவி வருவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே புதிதாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவ்விரண்டு உயர் கோபுர மின் விளக்கை சம்பந்தப்பட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here