தஞ்சாவூர், மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேவுள்ள புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு பகுதிகளில் சுமார் 230 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அங்கிருக்கும் இரயில் பாதையை கடந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளதால், வடக்கு தோப்பு  பகுதியில் பகுதி நேர ரேசன் கடை கேட்டு தொடர்ந்து போராடி வருவதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கோரிக்கையினை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் உள்ளூர் மற்றும்மாவட்ட மேலும் துறைச் சார்ந்த நிர்வாகம் என யாரும் எடுக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அக்கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து அடுத்தக் கட்ட போராட்டமாக இன்று வயலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அரசின் கவன்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் நூதனப் போராட்டத்தை கையிலெடுத்து போராடி வருகின்றனர்.

மேலும் அப்போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஊர் மக்களிடம் வசூல் செய்து சொந்த நிதியில் ஒரு லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடிக்காக கட்டிடம் கட்டி வைத்துள்ளோம். அதில் ரேசன் கடையை கொண்டு வருவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். ஏற்கனவே சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம். ஆனால் இதுவரை நடவடிக்கையும் எடுக்காததால், இன்று சமைத்து சாப்பிட்டு தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மூன்று கிலோமீட்டர் நடந்து செல்வதால் பெண்கள் மயக்கமடையும் நிலை ஏற்படுவதாகவும், ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை தூக்கிட்டு வர முதியவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் நடந்து சென்று பொருட்கள் வாங்க வரிசையில் நின்றும் உரிய பொருட்கள் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக இப்பகுதியில் பகுதி நேர ரேசன் கடை கொண்டு வர வேண்டும், இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

 

 

செந்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

அமுதவள்ளி வடக்கு தோப்பு.

கனகாம்பாள் வடக்கு தோப்பு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here