சிங்கப்பெருமாள்கோவில், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள பாரேரி சாலை சந்திப்பில் 500- க்கும் மேற்பட்டவர்கள் இன்று மனித உயிர்களை பாதுகாத்திடும் முக்கியக் ஐந்துக் கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாலை விபத்துகளினால் ஏற்படும் விலை மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்புக்களை தடுத்திடவும், மேலும் சாலை பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்திட வேண்டியும், நெடுஞ்சாலைகளில் உள்ள மின் விளக்குகளை மிளிரச் செய்திட வேண்டியும், அப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு வெகு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை மையத்தை திறந்திட வலியுறுத்தியும் மேலும் முக்கிய சந்திப்புகளில் குறிப்பாக திருத்தேரி பாரேரி சந்திப்பில் சிக்னல் அமைத்து தர வேண்டியும், பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர வேண்டியும், பாதசாரிகளின் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்கள் பயன்படுத்திட கிரில் தடுப்பு அமைத்து சர்வீஸ் சாலைகள் அமைத்து தர வலியுறுத்தியும் துறை சார்ந்த நிர்வாகம், மாவட்ட மற்றும் தமிழக அரசுக்கும் அக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஒன்றிய கவுண்சிலர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரி சங்கங்களின் பேரமைப்பு, அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம், மோட்டர் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம், மனித உரிமைகள் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு, சுற்றுசூழல் மற்றும் மனித நல மேம்பாட்டு கழகம், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்ற தடுப்பு அமைப்பு, டாக்டர் APJ அப்துல்கலாம் மக்கள் பொது நல அமைப்பு, அன்னை தெரேசா மக்கள் நல அறக்கட்டளை, வேன் உரிமையாளர்கள் சங்கம், குடியிருப்புபோர் நல சங்கங்கள் மற்றும் சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி பாரேரி இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியோடு உரக்க முழக்கம் எழுப்பியவாறு அவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டது அதனைக் கண்ட அனைவருக்கும் தெரிய வந்தது. அதை அரசும் கண்டுக்கொண்டால் பல மனித உயிர்கள் விபத்துக்களில் இருந்து காக்கப்படும்.