குடவாசல், மார்ச். 13 –
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான அக்கட்சியினர் அனைவரும் அம்மா என்றழைக்கடும் மறைந்த ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி பகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நலிந்த மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் அவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் அவ்விழாவில் சிறப்புரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் காமராஜ், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள்தான் ஸ்டாலின் தலைமையிலான இத்திமுக கட்சி எனவும், மேலும் இன்று அக்கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது எனவும், மேலும் வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தையும் நிறுத்தப் பார்க்கிறார்கள் எனவும், மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்புதான் தொடர்ந்து எல்லாப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகிறது என ஆவேசமாக அக்கூட்டத்தில் பேசினார்.
மேலும் அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தும் போது, மக்களின் துயரம் நீக்க மீண்டும் புரட்சித்தலைவர் நல்லாசியுடன் அதிமுக ஆட்சி மலருமெனவும், அவ்வாட்சி எடப்பாடியார் தலைமையில் தமிழ்நாடு மக்களுக்கு நல்லாட்சியைத் தருமெனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் செருகுடி ராஜேந்திரன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் சங்கர் மற்றும் , அதிமுக…நகர கிளை கழக பொறுப்பாளர்கள். மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இக்கூட்டத்தில் திரளாக வந்திருந்து கலந்து கொண்டனர்.






















