பொன்னேரி, ஜூன். 22 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆமூர், மாலிவாக்கம்,  கங்காடிகுப்பம், குதிரைபள்ளம், சத்திரம், இருளிப்பட்டு. அழிஞ்சிவாக்கம் ,ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு ,  உள்ளிட்ட கிராமங்களில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்த வழியாக தடம்  டி 41 அரசு பேருந்து செங்குன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்தப் பத்தாண்டுகளாக பேருந்து சேவை நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். இதுக் குறித்து அப்பகுதி மக்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பேரில் கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப்படமால் இருந்த பேருந்து சேவையை பால்வள துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்றுதொடங்கி வைத்தார், அதற்கான நிகழ்ச்சி பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார். சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா,மு, நாசர். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் சோழவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வசேகரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேருந்தைகொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும், பேருந்தில் பயணித்த அமைச்சர் அவ்வழியாக பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், பொன்னேரி நகராட்சியின் தலைவர் பரிமளம்விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி சுந்தரமூர்த்தி, ஆமூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியாஆனந்த், திருமலை, சன்டிவிமுத்து, சந்திரன், உள்ளிட்ட திரளான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here