காஞ்சிபுரம், ஏப். 20 –
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய அறைகூவலின்படி தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க கோரியும், சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், MRB செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சத்திற்க்கும் மேற்பட்டோர்க்கு காலமுறை ஊதியம் வழங்க கோரியும், கொரோனாவை காரணம் காட்டி 2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பு மேலும் காலம் குறிப்பிடாமல் தடை செய்ததை உடன் திரும்பப் பெற கோரியும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட கோரியும், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட கோரியும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவையை வழங்கிட கோரியும், கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்டை பணி நியமனம் வழங்கிடகோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.