கொல்கத்தா:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என நாம் அனைவரும் சபதமேற்க வேண்டும் என இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

தற்போது மத்தியில் நடைபெறும் ஆட்சி கைகளில் ரத்தக்கறை படிந்த மோடி, அமித் ஷா என்ற அண்ணன் – தம்பிக்கு சொந்தமான ஆட்சியாக மாறிவிட்டது. இந்த ஆட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் எதுவும் மந்திரிகளுக்கு கூட தெரியாத வகையில் இந்த அண்ணன் – தம்பியின் முடிவாக ஆகிவிட்டது.

புல்வாமாவில் தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறையின் மூலம் மத்திய அரசுக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், நமது வீரர்களின் உயிரை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலின்போது போர்போன்ற பதற்றநிலையை உருவாக்க வேண்டும் என்ற மனநிலையில் நமது வீரர்கள் சாகட்டும். அவர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்யலாம் என மத்திய அரசு இந்த தாக்குதலுக்கு இடம் அளித்தது எனவும் மம்தா குற்றம்சாட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here