திருவள்ளூர், மார்ச். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ் முதலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட கவரப்பேட்டையில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியத்தில் இருந்து சுமார் ரூ. ஒரு கோடியே 93 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக நவீன எரிவாயு தகன மேடையினை பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்ட நிலையில், அதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா உள்ளிட்டவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

மேலும் அந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய திமுகச் செயலாளர் கி.வே ஆனந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் IPDA தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் குமார், வழக்கறிஞர் தங்க தேவன், ஜெயஸ்ரீ பரசுராமன், பூங்குழலி உதயகுமார், ஆகியோர் உள்ளிட்டவர்கள் அமைச்சருடன் உடனிருந்தனர். நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிகள் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் செயல்படுத்த அவர்களை அமைச்சர் அப்போது அறிவுறுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here