திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகரமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து 15 தேர்தல் பணிமனைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார். அப்போது ஒவ்வொரு வார்டுகளிலும் திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 35 வார்டுகள் திமுகவும், 4 வார்டுகளில் கூட்டணி கட்சியினரும் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் 15 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனைகளை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்து வாக்காளர்களிடையே உதயசூரியன் மற்றும் கைசின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் மேளதாளம் முழங்கவும் வரவேற்றதோடு பெண்கள் அதிகளவில் திரண்டு தீபமேற்றி வரவேற்பளித்தனர். இந்த பணிமனை திறப்பு விழாவில் மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் மு.பெ.கிரி எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், தொமுச மாநில செயலாளர் க.சௌந்தர்ராஜன், டிவிஎம்.நேரு, பிரியா விஜயரங்கன், வழக்கறிஞர் கோ.புகழேந்தி, மாவட்ட அமைப்பாளர்கள் இரா.ஜீவானந்தம், கு.கணேஷ், அ.அருணகிரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் செங்கம் குமார், திருவண்ணாமலை நகர தலைவர் என்.வெற்றிசெல்வன் மற்றும் வேட்பாளர்கள் ராதிகா அருண்குமார் திலகம் ராஜாமணி கே.சுப்பிரமணி சுமதி அருண்குமார் உதயாரவி காயத்திரி கிருஷ்ணகுமார் இந்து புகழேந்தி கு.குமார், ஜமீலா பீவி முகமதுசேட் நிர்மலா வேல்மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.