உத்திரமேரூர், டிச. 05 –

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கன்னியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு அருகே சுமார் 150 ஆணடு பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த அரச மரத்தினை ஒட்டியவாறு சில ஆண்டுகளுக்கு முன் வேப்பமரம் ஒன்று சுயம்புவாக தோன்றி தானாக வளரத் துவங்கியது.

இதனை கிராம மக்கள் தினசரி காலை மாலை என இருவேலைகளிலும் வழிபடத் துவங்கினர். இந்நிலையில் உலக நன்மைக்காகவும், பொது மக்கள் நோய் நொடியின்றி வாழவும் அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைத்து வழிபாடு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. அதில் மணமகன் அரசன் என்றும், மணமகள் வேம்பு நாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து காரணைமண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் இத்திருமணம் கிராம மக்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

முன்னதாக அரச மரத்திற்கு பட்டு வேட்டியும்,  வேப்பமரத்திற்கு பட்டு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் முறையான திருமணச் சடங்கு மேற் கொள்ளப்பட்டது. 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டதை. தொடர்ந்து வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் ஓத, திருமாங்கல்யம் சூட்டிய மஞ்சள் கயிறுக்கட்ட கெட்டி மேளம் விண்ணைப்பிளக்க சுற்றியிருந்த கிராம மக்கள் அரச்சிதைக் கலந்த மலரைத் தூவ அரசுனுக்கும் வேம்பு நாயகிக்கும் திருமணம் கிராம மக்கள் முன்னிலையில், இனிதே நடந்தேறியது.

தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு கிராம மக்கள் அனைவரும் அவ்விரு மரங்களையும் வழிபட்டனர். இந்த வினோத திருமணத்துக்கு, வந்திருந்த கிராம மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுடன் விருந்து அளிக்கப்பட்டு தாம்பூலப்பையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காரணைமண்டபம் கிராம மக்கள் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு கிராமத்தை சேர்ந்த மக்களும் இவ்விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர் என்பது இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பைச் சேர்த்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here