காஞ்சிபுரம், செப். 15 –

இன்று மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் மற்றும் திராவிட இயக்க கொள்கைகள் கொண்ட கட்சியினர் என பல தரப்பட்டவர்களாலும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மலர் மாலை சூடியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக அண்ணா நினைவு இல்லத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவரும், ஆன்மீக பிரமுகருமான  முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பின்பு அங்கு பேரறிஞர் அண்ணா பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றை மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த மூக்குக்கண்ணாடி, பேனாக்கள், மடல்கள், அண்ணா உபயோகப்படுத்திய பொருட்கள், மற்றும் ஏராளமான புகைப்படங்கள் ஆகியவற்றை சுற்றி பார்த்தார்.

மேலும் இந்நிகழ்வின் போது   எஸ்.ரங்கநாதன்,  புல்லட் கே.பரிமளம், வக்கீல் ஆர்.வி.உதயன், வஜ்ஜிரவேல், வாலாஜாபாத் ஜெயகாந்தன்,  டில்லி,  மதன், படப்பை கோபால், முனிரத்தினம், யோகானந்தம், ஜெ.காமாட்சி கான்  உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here