கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் உப கண்டமாக விளங்கும் மதச்சார்பற்ற நாடான இந்தியாவை யாரும் பிளவுபடுத்த முடியாது என்றும் மணவாளநகரில் நடைபெற்ற 40 ஆம் ஆண்டு தேவாலய விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கூறினார்.

 

திருவள்ளூர், ஆக 1 –

 

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள  அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ஆம் ஆண்டின் ஆரம்ப விழா சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து சபைகளின் தலைவர்கள் டாக்டர் Rev. டாக்டர் J. செல்லதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவடி சிறுபான்மை மற்றும் அரசியல் குழு தலைவர் பிஷப் டாக்டர் K.மேஷாக் ராஜா ,மற்றும் சுவிசேஷகர் ஸ்டீபன் போதகர் ஐசக் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் முக்கிய அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளருமான ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டு பேசும்போது இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர் மேலும் சிறுபான்மைருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர் .ஆனால் கடந்த ஏழு ஆண்டுகள் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் கஷ்டங்கள் ஏற்படுத்தப்பட்டன அதன் விளைவு விரைவில் அந்த ஆட்சிக்கு முடிவு வரும். இதே ஜெப கூட்டத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என மூவரும் உள்ளோம் இதுதான் மத நல்லிணக்கம் மத ஒற்றுமை இதுதான் இந்தியா பல்வேறு மொழிகள் மதங்களை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வரும் இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது கடந்த ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG ராஜேந்திரனையும் ஜெபக்கூடம் சார்பில் கௌரவிக்கப்பட்டது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட மாணவ இணைச்செயலாளர் ஜெரால்ட் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி ஸ்ரீதர் மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் குமரன் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் TK பாபு மற்றும் கமலநாதன் ஜேசிபி கேசவன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிட துணை அமைப்பாளர் D.செல்வகுமார் மற்றும் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் D. சிவகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட  தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்க பொருளாளர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here