கும்பகோணம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள மேலத்தெருவில், எழுந்தருளியிருக்கும் செல்வ விநாயகர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருநாகேஸ்வரம் மேலத்தெருவில் எழுந்தருளியுள்ளதும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதுமான அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தின் ஸ்ரீ தர்ம சாஸ்தா, ஸ்ரீ துர்க்கை அம்மன், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பின்பு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, முதல் கால யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது,
மேலும் இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து, விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாமரைச்செல்வன், ஜெயராமன், அறங்காவலர் குழு தலைவர் சிவகுருநாதன், அறங்காவலர்கள் கண்ணையன், பானுமதி, சின்னையன், ஜெயராமன், இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் உமாதேவி, மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள், விழாகுழுவினர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.