மதுரவாயல், ஏப். 10 –

தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அத்தாக்கத்தின் பிடியிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் என தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் அவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர்,மோர் மற்றும் குளிர்பான கோடைக்கால பந்தலை நிறுவி அவர்களுக்கு அப்பானங்களை வழங்கி வருகின்றனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக உள்ள ஆளும் கட்சியான திமுக மற்றும் தற்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக ஆகிய இருக் கட்சிகளின் தலைவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க அக்கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போட்டிப் போட்டுக்கொண்டு, ஆங்காங்கே மாநகர், நகர், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகளில் நீர், மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் கோடைக்கால வெயிலின் தாகத்தை தவிர்க்க அவ்விருக் கட்சிகளின் பங்கு பெரும் அளவில் இருந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பில் 146 வது வட்டத்தில், அப்பகுதி செயலாளர் தேவதாஸ் (முன்னாள் மாமன்ற உறுப்பினர்) தலைமையில்  கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க  நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்ஜமின் பங்கேற்று ரிப்பன் வெட்டி அப்பந்தலை திறந்த வைத்தார். மேலும் இவ்விழாவின் முதல் நாளை முன்னிட்டு அங்கு வித விதமாய்  இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிருனி  மற்றும் பழ ரசங்கள் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வின் போது, முன்னாள் கவுன்சிலர்கள் தென்றல்குமார், பரத் மற்றும் வட்ட செயலாளர் பாரதி உள்ளிட்ட  கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் அதுப்போன்று, திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின்  70 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 147 வது வட்டத்தில் திமுக வட்டச் செயலாளர் S.G.மாதவன் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை முகாமினைத் துவக்கி வைத்து, அப்பகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் காலை உணவு  வழங்கும்  நிகழ்ச்சி என தடபுடலாக நடைப்பெற்றது.

மேலும், இவ்விழா வளசரவாக்கம்  மண்டலம்-11, குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C., முன்னிலையில்  நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி  கலந்து கொண்டு   சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் மாமன்ற உறுப்பினர்கள் ரமணிமாதவன்.MC,, M.E.ஸ்டாலின்.MC, மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட திரளான அப்பகுதி மக்கள் இவ்விழாவில் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here