செங்கல்பட்டு, ஏப். 17 –
செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் 34 வயதுடைய டார்ஜன் மேலும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் உள்ளார். மேலும் டார்ஜன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யும் செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் அவரது மனைவி ஜெயந்தியுடன் டார்ஜன் தகராறில் ஈடுப்ட்டதாகவும், அப்போது அதனை தட்டிக்கேட்க வந்த அவரது மாமனார் துலுக்கானத்தை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் அவ்வழக்கில் டார்ஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீது தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு 12-மணியளவில் குடித்துவிட்டு வந்த டார்ஜன் தனது மனைவி ஜெயந்தி உடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் இது குறித்து ஜெயந்தி தனது தம்பி சைமன் (எ) சூர்யாவிடம் கூறி உள்ளார். அப்போது சூர்யா டார்ஜனிடம் சென்று தனது அக்காவை ஏன் அடித்து துன்புறுத்துகிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது டார்ஜன் சூர்யாவை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவருடன் சென்று அரிவாளால் டார்ஜனின் தலையில் வெட்டியுள்ளார். அப்போது தலை தனியாக துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்த டார்ஜன் சிறிது நேரத்தில் துடிதுடித்து சம்வ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, டார்ஜனை படுகொலை செய்த சூர்யா மற்றும் லோகேஷ் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அச்சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், டார்ஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து டார்ஜனை படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சைமன் என்கிற சூர்யா (25) மற்றும் அவரது நண்பரான லோகேஷ் பாபு (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.