பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்பின், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். யாரை திருப்தி படுத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு மோடியின் காலில் மிதிப்பட்டுக் கிடக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம். வேலூரில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திமுக தான்’ என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here