திருவள்ளூர், ஏப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பஞ்சாயத்து அளவிலான  மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற் கட்டமாக நடைப்பெறவுள்ளது.

அதில் பொது மக்கள் அனைவரும் 100% சதவிகிதம் வாக்களிப்பதனை வலியுறுத்தும் வகையில் ரங்கோலி கோலம் வரையப்பட்டு அதில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல, விரலுக்கு மையிட்டு விதியை மாற்று, உங்கள் வாக்கு உங்கள் குரல், 100% சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் வரையப்பட்டு வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் பங்கேற்று நான் நிச்சயம் வாக்களிப்பேன், 100 சதவீதம் வாக்களிப்பேன் வாக்களிப்பது நம் கடமை என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகத்துடன் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், PLF செயளாளர் காந்திமதி, BC தமிழ் செல்வி ஆகியோர் உள்ளிட்ட நூற்றுகணக்கானவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here